Actress Simran:சின்னத்திரையில் களமிறங்கும் இடுப்பழகி!

Advertisements

Actress Simran : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், சிம்ரன். இவர் தற்போது சின்னத்திரையில் ஒரு ஷோவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

Actress Simran : கோலிவுட்டில் எத்தனை ஆயிரம் நாயகிகள் வந்தாலும் ஒரு சிலரை மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட நாயகிகளுள் ஒருவர், சிம்ரன். ‘இடுப்பழகி’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

இடுப்பழகி சிம்ரன்:

சிம்ரனின் உண்மையான பெயர், ரிஷிபாலா நாவல். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர், 2003ஆம் ஆண்டு தீபக் பாகா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பின்பும் திரையுலகில் ஆக்டிவாக இருந்தார்.

1997ஆம் ஆண்டு தமிழில் முதன் முதலாக வி.ஐ.பி படத்தில் நடித்த இவர், அந்த ஆண்டிலேயே தொடர்ந்து 4 படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார். அந்த வருடம் மட்டுமல்ல, அடுத்தடுத்து வந்த வருடங்களிலும் பல படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான அவள் வருவாளா, நட்புக்காக, வாலி, ஜோடி உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்தன. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்தப் படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்படுகிறது. “சேலையில வீடு கட்டவா” பாடலில் இடுப்பை காட்டி ஆடியதால் இவருக்கு இடுப்பழகி என்ற பெயர் வந்தது.

2009ஆம் ஆண்டில் ஐந்தாம் படை படத்தில் வில்லியாக நடித்த சிம்ரன், சில ஆண்டுகள் திரையுலகிலிருந்து ப்ரேக் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, 5 வருடங்கள் கழித்து சில படங்களில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்க, அடுத்து கொஞ்சம் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவருக்கு இன்னும் கொஞ்சம் மார்கெட்டை தேடிக்கொடுத்த படம், பேட்ட. இந்தப் படத்தில் ரஜினியின் காதலியாக வந்த இவர், இன்னும் இளமை மாறாமல் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் லநல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

சின்னத்திரையில் களமிறங்குகிறார்..

திரையுலக நட்சத்திரங்கள் பலர், ஒரு கட்டத்திற்கு மேல் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரைக்கு நடிக்க வருகின்றனர். அவர்களுக்கு நல்ல சீரியல்களும் கிடைத்து நல்ல வாய்ப்புகளும் அமைந்து விடுகின்றன. அந்த வகையில், நடிகை சிம்ரனும் தற்போது சின்னத்திரைக்கு வர இருக்கிறார். அவர் ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாரா? அல்லது சீரியலில் நடிக்கிறாரா? என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

மிகவும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட நிகழ்ச்சி, ஸ்டார் மியூசிக் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில்தான் சிம்ரன் விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

சிம்ரன் நடிப்பில் வெளியாகமல் இருக்கும் படம்..

நடிகை சிம்ரன் நடித்து இன்னும் வெளியாகாமல் இருக்கும் படம், அந்தாகன். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதுன் என்ற படத்தின் தமிழ் ரீ-மேக்தான் இப்படம். இதில் இவர் வில்லி ரோலில் நடத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையிலும், சில காரணங்களால் இதன் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *