
டில்லி; வங்கதேசம் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு ஏன் அழைக்கவில்லை என்று மத்திய அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கேள்வி எழுப்பி உள்ளது.
அனைத்துக் கட்சிகள்
வங்கதேசத்தில் தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி, ஷேக் ஹசீனா தப்பியோட்டம் ஆகியவை குறித்து மத்திய அரசு தரப்பில் நேற்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்குறித்து அனைத்துக் கட்சியினரிடமும் விளக்கிக் கூறினார்.
ஆம் ஆத்மி
இந்நிலையில் இந்தக் கூட்டத்துக்குத் தங்களை அழைக்க வில்லை என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டி இருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் ராஜ்ய சபா எம்.பி., சஞ்சய் சிங் கூறி இருப்பதாவது;
அழைக்கவில்லை
வங்கதேச விவகாரம், தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்னும்போது, அனைத்துக் கட்சிகளுடன் பிரதமர் உள்ளிட்டோர் விவாதித்து இருக்க வேண்டும். ஆனால், இது போன்ற சூழ்நிலையில் தேசிய கட்சியான ஆம் ஆத்மியை கூட்டத்துக்கு அழைக்கவில்லை.
மத்திய அரசின் செயல்
எங்களுக்கு லோக் சபாவில் 3 எம்.பி.க்களும், ராஜ்ய சபாவில் 10 எம்.பி.க்களும் உள்ளனர். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


