சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல-இயக்குனர் சமுத்திரக்கனி..!

விழுப்புரம் மாவட்டம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில், திரைப்படக் கலைஞரும், இயக்குநருமான சமுத்திரக்கனி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் யாரும் யாரை மாதிரியும் இருக்க முடியாது என்றும், எந்த குழந்தையும் இன்னொரு குழந்தையைப் போல இருக்கவே முடியாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் வெறும் சினிமா, பாட்டு, சண்டை மட்டுமே செய்யும் கூட்டம் அல்ல என்றும்,இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே உழைக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *