
குடும்பஸ்தன் பட நாயகி சான்வே மேகனாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நக்கலைட்ஸ் இயக்கிய குடும்பஸ்தன் திரைப்படம் நான்கு நாட்களில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
குடும்பஸ்தன்’ பட நாயகி சான்வே மேகனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த மணிகண்டன் நடிப்பில் தற்போது குடும்பஸ்தன் திரைப்படம் வெளியாகித் திரையிடப்பட்டு வருகிறது.
இந்தத் திரைப்படத்தை நக்கலைட்ஸ் youtube குழுவினர் இயக்கியிருக்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள், சுவாரஸ்யங்கள் என அனைத்தையும் இந்தத் திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.
நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்தத் திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.
