அம்புலி மாமா பாணியில் ஒரு குழந்தைகளுக்கான திரைப்படம் – ‘க்ராணி’ படக்குழுவினர் அறிவிப்பு..!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள தனியார் திரையரங்கில் க்ராணி’ படத்தினை ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து க்ராணி’ படக்குழுவினர் பார்த்து மகிழ்ந்தனர். இதன் பின்னர் இயக்குனர் விஜயகுமார் மற்றும் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இந்த திரைப்படம் முழுமையாக குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

சிறுவயதில் நாம் கேட்ட அம்புலி மாமா கதைகளின் அடிப்படையில், குழந்தைகள் ரசிக்கும் வகையிலும் ‘க்ராணி’ திரைப்படம் அமைந்துள்ளதாக அவர்கள் கூறினர். நடிகை வடிவுக்கரசி கதாபாத்திரம் மிகுந்த சவாலானதாக இருந்ததாகவும், அந்த கதாபாத்திரம் திரையில் தோன்றும் போதெல்லாம் ரசிகர்கள் கைத்தட்டி வரவேற்கும் காட்சி தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *