Divya Bharathi Birthday Celebration: நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜிவி பிரகாஷ்!

Advertisements

நடிகை திவ்ய பாரதி தன்னுடைய பிறந்தநாளை கிங்ஸ்டன் படக்குழுவுடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்த பேச்சிலர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி. முதல் படத்திலேயே தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த திவ்ய பாரதிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. பேச்சிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து திவ்ய பாரதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதையடுத்து பிக்பாஸ் பிரபலம் முகென் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் காதல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதுதவிர பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிருக்கு ஜோடியாக ஆசை என்கிற படத்தையும் கைவசம் வைத்துள்ளார் திவ்ய பாரதி. இது இஷ்க் என்கிற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். இப்படி லைன் அப்பில் இரண்டு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்க, அண்மையில் திவ்ய பாரதி நடித்த வெப் தொடர் ஒன்று வெளியாகி இருந்தது. ஜர்னி என பெயரிடப்பட்ட அந்த வெப் தொடரை சேரன் இயக்கி இருந்தார். இது தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
Divya Bharathi Birthday Celebration

இதையடுத்து நடிகை திவ்ய பாரதி நடிப்பில் தற்போது கிங்ஸ்டன் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர தெலுங்கில் கோட் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில், நடிகை திவ்ய பாரதி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். பிறந்தநாளன்றும் கிங்ஸ்டன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட திவ்ய பாரதிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழுவினர். ஜிவி பிரகாஷ் மற்றும் கிங்ஸ்டன் படக்குழு உடன் இணைந்து திவ்ய பாரதி பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *