
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பணி முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 11 கோடியே 74 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரத்தச் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, அப்போலோ மருத்துவமனைக் குழுமத்தின் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சரிடம் மத்திய பட்ஜெட் குறித்துச் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய பட்ஜெட் தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றும், அதனால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என்றும் முதலமைச்சர் கூறினார்.


