
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்!
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும் மறுமலர்ச்சி கவிஞருமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 1826-ஆம் வருடம் அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார்.இவர் மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணிபுரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.
வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமையுணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துக்கள் ஆகியவை இவரின் கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன. தமிழகத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது தன் சொத்துக்கள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன் கட்டை ஏறும் வழக்கம் இவற்ரை கடுமையாக எதிர்த்தார். தமிழில் முதல் புதினத்தைப் படைத்தவரும் மறுமலர்ச்சி கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான சாமுவேல் வேத நாயகம் பிள்ளை 62 -ஆவது வயதில் 1889 -ல் மறைந்தார்.



