Israel Hamas War Updates: உடல்களின் அடியில் மறைந்து இருந்து உயிர் தப்பிய இளம்பெண்!

உயிரிழந்த உடல்களின் அடியில் மறைந்து இருந்து உயிர் தப்பிய இளம்பெண்!

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதலில் பலியானோரின் உடல்களுக்கு அடியில் 7 மணிநேரம் மறைந்து இருந்து இளம்பெண் உயிர் பிழைத்துள்ளார்.

டெல் அவிவ்: இஸ்ரேலை அடுத்த காசாவை ஒட்டிய கிபுட்ஜ் ரீம் என்ற பகுதியருகே கடந்த வார இறுதியில், சனிக்கிழமையன்று இசை திருவிழா ஒன்று நடந்துள்ளது. நேச்சர் பார்ட்டி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். ஆடிப்பாடி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அடுத்து நடக்க போகும் பயங்கர நிகழ்வைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளால் தாக்கியது. அப்படி அவர்கள் முதலில் தாக்குதல் நடத்திய பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இதில் சிக்கி திருவிழாவில் பங்கேற்றவர்களில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்தத் தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. ஹமாஸ் அமைப்பு துப்பாக்கியால் சுட்டதும் அனைவரும் எல்லா திசைகளை நோக்கியும் ஓடியுள்ளனர். எனினும், அவர்களில் 250 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் இளம்பெண் ஒருவர் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பியுள்ளார். உயிரிழந்த உடல்களின் அடியில் 7 மணிநேரம் மறைந்து இருந்து அவர் உயிர் தப்பி உள்ளார்.

லீ சசி என்ற அந்தப் பெண் மற்றும் 35 பேர் வெடிகுண்டு புகலிடம் ஒன்றில் ஓடிச் சென்று பதுங்கி உள்ளனர். அவர்களைத் தேடி வந்த ஹமாஸ் குழுவினர், தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் சுட்டு தள்ளினர். பின்னர் கையெறி குண்டுகளையும் வீசி, தாக்கியுள்ளனர். இதில், பலரும் ஒருவர் மேல் ஒருவர் என அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்துள்ளனர்.

எனினும், இதில் சசி பாதுகாப்பாகத் தப்பியுள்ளார். அவர்களில் 10 பேர் மட்டுமே உயிருடன் வெளியே வந்துள்ளனர். உயிரிழந்த உடல்களின் அடியில் மறைந்து இருந்து அனைவரும் உயிர் தப்பினோம் என அவர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

இந்தப் பயங்கர தகவலைச் சசி, தன்னுடைய தோழியான நடாஷா ரகேல் கிர்த்சக் கட்மேனிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். 7 மணிநேரம் பதுங்கியிருந்தோம். நான் ஜோக் எதுவும் கூறவில்லையெனத் தெரிவித்து, புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் அதற்குச் சான்றாக வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், பலர் உயிரிழந்த நிலையில் கிடக்க கூடிய காட்சி அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *