International Day for the Eradication of Poverty: இன்று!

உலக வறுமை தினம்…

வறுமையின் நிறம் சிகப்பு.கொடிது, கொடிது,  வறுமை கொடிது….அதிலும் கொடிது  இளமையில் வறுமை. வறுமையின் நிறம் சிகப்பு. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னாதது. ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பம் தருவது அந்த வறுமையைத் தவிர வேறு எதுவும் இல்லை.பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. இதிலிருந்து வாழ்க்கைக்கு வருவாய் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். வருமானம் இல்லையேல் வரும் மானம்.

என்ன சொல்வது வறுமை என்பது ஒன்றுமே இல்லாத வெறும் நிலையைக் குறிக்கும். உணவு தொடங்கி வாழ்விற்கு தேவையான அனைத்தில் ஒன்று கூடக் கிடைக்காமலோ, அல்லது ஒரு சிலது கிடைக்காமல் துன்புறுவதோ, சரியான வருமானம் இல்லாமல் வரியவராய் வாழ்வதையே வறுமை என்பர்.

சிவப்பு நிறம் அபாயத்தைக் குறிக்கும். அதனாலோ என்னவோ  வறுமைக்கு சிவப்பு நிறம் வைத்துள்ளார்கள். உலகளவில் வறுமை மறைந்து வாழ்வில் செழிப்பும் பசுமையும் தேவைகளும் கிடைக்கவும், அதன் இன்றியமையாமையை உணர்ந்து உழைக்கவும்  ஏற்படுத்தப்பட்டதே உலக வறுமை ஒழிப்பு தினமாகும்.

முக்கியமாகப் பசிப்பிணியிலிருந்து மக்களை விடுவிக்கும் நோக்கத்துடன் 1992 ஆம் ஆண்டு முதல் ஐநா சபை இந்த நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. உலகில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1987 ஆம் ஆண்டு முதன் முதலாகப் பாரிஸ் நகரில் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ஆம் நாள் உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. பசி, பட்டினி, பஞ்சம், இவற்றிலிருந்து விடுபட்டு மக்கள் நல்வாழ்வு வாழ ஐக்கிய நாடுகள் அமைப்பு 1982 -ஆம் ஆண்டு உலக வறுமை ஒழிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பொது சேவையாற்றுபவர்கள், இன்ன பிற நிறுவனங்கள், அறக்கட்டளைகள் தாமாக முன்வர வேண்டும்.ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகள், முக்கியமாகக் கல்வி, மருத்துவம், உள்ளிட்ட பல தேவைகளை வசதி படைத்தோர்  இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவி செய்ய வேண்டும். திருவிழாக்கள், பண்டிகைகள், பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளின்போது ஏழை மக்களுக்கு உதவி செய்வதை கடைபிடிக்க வேண்டும்.

2015ஆம் ஆண்டு உலகில் உள்ள வறுமையில் வாடும் மக்களில் பாதி பேர் இந்தியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, வங்கதேசத்தில் வாழ்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. ஆனால் சமீபத்திய கணிப்புகளின்படி அதிக மக்கள் ஏழ்மையில் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை விட நைஜீரியா முந்திவிட்டது அல்லது முந்தும் நிலையில் உள்ளது எனத் தெரிய வந்துள்ளது, இரு நாடுகளிலும் ஏழ்மையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனுக்கும் சற்று குறைவாக உள்ளது.

உலக அளவில் அதிக அளவிலான வறுமை நிலையில் வாழும் மக்கள் ஆப்ரிக்க நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. தினமும் 1.90 டாலருக்கு குறைவான வருவாயுள்ள மக்கள் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்களாகக் கணக்கிடப்படுகின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள் 1.90 டாலர் அல்லது அதற்குக் குறைவான வருவாயுள்ள 10 பேரில் 9 பேர் சஹாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்காவில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வறுமை என்பது வெறுமனே மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை மட்டுமே இல்லை. வறுமை காரணமாக மக்கள் உணவு, குடிநீர், உடை, சுகாதாரம், வாழ்விடம், கல்வி போன்ற எதுவுமே கிடைக்காத சூழலில் வாழ்கின்றனர். எனவே வறுமை ஒழிப்பு என்பதுதான் மனித இனத்தின் பரிபூரண விடுதலையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வறுமையை விரட்டுவோம் வாழ்வில் சிறப்போம். வரியவரைக் காணின் வரிந்து கட்டி உதவுங்கள், விரைந்து வந்து உதவுங்கள்.பொருள் இல்லையேல் மறுளும், மக்கும் வாழ்கை. இது தான் நிதர்சனமான உண்மை. உழைப்போம். வறுமையைப் போக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *