அரசியலை விட்டு விலகும் நாம் தமிழர் சீமான்? பரபரப்பு பின்னணி தகவல்.!

Advertisements

நாம் தமிழர் சீமான் வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடியாத ஏராளமான பிரச்சனைகளில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் தேர்வு செய்யும் வேட்பாளர்களில் பெரும்பாலான பேர் தாங்கள் போட்டியிட விரும்பவில்லை என கருத்து தெரிவித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

இதுவல்லாமல்,  ஏராளமான திரை மறைவு பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் நாம் தமிழர் சீமான் வருகிற சட்டமன்றத் தேர்தலோடு அரசியலை விட்டு விலகுவார் என பேசப்படுகிறது. தினத்தந்தி அதிபர் சீ.பா ஆதித்தனார் நடத்தி வந்த நாம் தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியாக கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிடத் தொடங்கியது. முதன்முதலாக பங்கேற்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு சுமார் 4 லட்சத்து,60 ஆயிரம் வாக்குகளை பெற்றது. இந்த தேர்தலில் 1.7 சதவீத வாக்குகளை பெற்று தமிழக அரசியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது நாம் தமிழர் சீமான் கட்சி.

இதன் பின்னர் , 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு மூன்று புள்ளி ஒன்பது சதவீத வாக்குகள் பெற்றது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 6.58% வாக்குகளை பெற்றது.

இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 32 லட்சம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது ஐந்து தொகுதிகளில் இந்த கட்சி மூன்றாவது இடத்தை பிடித்தது. தற்பொழுது வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.  234 தொகுதிகளிலும் இதற்கான வேட்பாளர்களை ஆய்வு செய்து ஒவ்வொரு பகுதியாக சீமான் அறிவித்து வருகிறார்.

இதற்கிடையே,  மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் நாம் தமிழர் கட்சி திண்டாடி வருவதாக சொல்கிறார்கள். இதன் நிமித்தமாக அவர் தேர்வு செய்யும் வேட்பாளர்களில் பெரும்பாலான பேர் எங்களிடம் பொருளாதார வசதி இல்லை தவிரவும் பிரச்சாரம் செய்வதற்கான ஆட்கள் பலமும் இல்லை என போட்டியிட மறுப்பு தெரிவித்து வருவதாக சொல்ல படுகிறது.

இதனிடையே நடிகை விஜயலட்சுமி தரப்பில் சீமான் மீது குற்றம் சாட்டிய விவகாரம் நாம் தமிழர் சீமானை பெண்கள் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுவதால் நாம் தமிழர் சீமானின் வாக்கு வங்கி மிகவும் குறை வாகும் என தெரிகிறது . இதுவல்லாமல் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தை விமர்சனம் செய்து வருவதால் விஜய் ரசிகர்கள் அனைவரும் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இதோடு திமுக,  அதிமுக,  பாஜக என அனைத்து கட்சி தரப்பினரும் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக களமிறங்குவதால் இந்த தேர்தலை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலையில் நாம் தமிழர் சீமான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் நிமித்தமாக அவர் தற்போது தனது வாய்சை குறைத்துக் கொண்டு வருகிறார்.

இதற்கிடையே கட்சியிலிருந்து காளியம்மாள் நீக்கப்பட்டது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது இதனால் தொண்டர்கள் பலர் விரக்தியில் இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் சாட்டை துரைமுருகன் தற்போது இரண்டாம் கட்ட பேச்சாளராக இருக்கிறார் . அவர் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் அவருக்கு இந்த முறை சீட் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.  கட்சிக்குள் சாட்டை துரைமுருகனுக்கு தொகுதி ஒதுக்கி தரப்பட வேண்டும் என்ற குரலும் இருக்கிறது.

இதன் உச்சகட்டமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 2000 நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சீமானுக்கு எதிராக குரல் கொடுத்த படி கட்சி மாறி இருக்கிறார்கள்.  120 நிர்வாகிகளும் இதற்குள் அடங்குவார்கள் . இவர்கள் அனைவரும் கட்சிக்கு பலமானவர்களாகவும் கடுமையாக உழைப்பவர்களாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தற்பொழுது நாம் தமிழர் கட்சி மிகவும் பலவீனமான சூழ்நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது. இதனிடையே நாம் தமிழர் சீமான் தொண்டர்களை மதிப்பதில்லை நிர்வாகிகளின் ஆலோசனைகளை கேட்பதில்லை என்ற மனக்குமுறல் தற்பொழுது தீயாக பரவி வருகிறது. எனவே முன்பை போல் நாம் தமிழர் தொண்டர்கள் இந்த தேர்தலில் தீவிரமாக பணி செய்வார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பிரச்சார பணியை சீமான் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாக்கு வங்கி சரியும் பட்சத்தில் சீமான் அரசியலை விட்டு விலகலாம் என்ற முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து , தனக்கு நெருக்கமான சிலரிடம் சீமான் பேசும் பொழுது எதற்காக இந்த அரசியலுக்கு வந்தோம் என்று தோன்றுகிறது எவ்வளவோ குரல் கொடுத்தும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கை பெற முடியவில்லை . ஊழல் செய்கிறவர்கள் தவறு செய்கிறவர்களுக்கு தான் மக்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று வேதனை கலந்த குரலில் பேசியதாக சொல்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *