
82 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் இந்தியா!
ஹாங்சு: ஆசிய விளையாட்டு போட்டியில் வில் வித்தையில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது.இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் வில் வித்தையில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. ஜோதி, அதிதி, பரணி ஆகியோர் கொண்ட இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.



