
அவர் வேறு யாரும் அல்ல மறைந்த பிரபல மலையாள நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான சீனிவாசனின் இரண்டாவது மகன். மூத்த மகன் வினீத் சீனிவாசன் படங்களில் நடிப்பதுடன், Direction -னும் பன்னிட்டு இருக்காரு.. வினீத் சீனிவாசன் அமைதியான டைரக்டர்னா, நம்ம தியான் அப்படியே ஆப்போசிட்… எதை வேணாலும் எங்கே வேணாலும் ‘பட்டுன்னு’ பேசி சர்ச்சையில மாட்டிக்கிறதுல கில்லாடி!
தியான் சீனிவாசன் பேட்டிகள் கொடுத்தாலோ, பட விழாக்களில் பேசினாலோ அது கண்டிப்பாக வைரலாகிவிடும். இது mollywood -ல் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது தற்போது தான் கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.தன் அண்ணன் இயக்கிய திரா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய கெரியரை துவங்கிய தியான் சீனிவாசன் தற்போது ஒரு இயக்குநரும் கூட.
நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான லவ் ஆக்ஷன் டிராமா தான் தியான் இயக்கிய முதல் படமாகும். நடிப்பு, இயக்கத்தை தாண்டி அவர் ஒரு தயாரிப்பாளர், திரைக்கதை Writer ஆவார்.தற்போது கேரளா மீடியாக்கள் மட்டும் அல்ல நேஷனல் மீடியாக்களும் தியான் சீனிவாசன் பற்றி செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் விசிட்டர் பட பூஜையின்போது தியான் பேசிய விஷயம் ஆகும்.
தளபதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற நாளில் அந்த விழா நடந்த இடத்தில் முதல் வரிசையில் பட்டுச்சேலையில் அழகாக அமர்ந்திரந்தார் த்ரிஷா கிருஷ்ணன். விஜய் அண்ணா பதவியேற்றதை பார்த்தபோது மகிழ்ச்சியில் த்ரிஷாவின் கண்களில் தானாக கண்ணீர் வந்தது. அவர் கண்கலங்கிய வீடியோ கூட வைரலானது.
இந்நிலையில் விஜய் அண்ணா , த்ரிஷா கிருஷ்ணன் பெயரை தெரிவிக்காமல், நான் முதல்வராகும் போது நவ்யா நாயர் பட்டுச்சேலை உடுத்தி முதல் வரிசையில் உட்கார்ந்து கண்களில் கண்ணீர் இருக்கணும் என்றார் தியான் சீனிவாசன். அவர் விஜய்ணாவை தான் சொல்கிறார் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே சாரி விஜய் சார், என் நண்பன் பைத்தியம். அவன் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது என்று நடிகர் அஜு வர்கீஸ் தெரிவித்தார்.
அஜு சொன்னதுமே, தியான் சீனிவாசன் நிச்சயம் சி.எம். சாரை தான் அப்படி பேசினார் என்று ரசிகர்கள் முடிவே செய்துவிட்டார்கள். அந்த வீடியோ வைரலாகவே நேஷனல் நியூஸாகிவிட்டார் தியான் சீனிவாசன். பதவியேற்பு விழா பேச்சு வீடியோ மட்டும் அல்ல தியானின் இன்னொரு வீடியோவும் கூட கண்டமேனிக்கு வைரலாகிவிட்டது.
அதுவும் விஜய்ணா பற்றியது தான்.தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டதும், 15 வருஷத்தில் நான் உன்னை முதல்வராக்கப் போகிறேன் என்று அஜு என்னிடம் சொன்னான் என்றார் தியான். அவர் மேலும் கூறியதில் , எடுத்த எடுப்பிலேயே முதல்வர் வேண்டாம்டா தியான். முதலில் நடிகர் சங்க தலைவராகு. அதன் பிறகு 15 ஆண்டுகளுக்கு சாரிட்டி செய்யணும், மக்களை ஏமாற்ற. விஜய் செய்தது மாதிரி.
அப்புறமாக முதல்வர் ஆகணும் நீ என்றான் என்றார்.நீ அப்படி என்கிட்ட சொன்ன தானே அஜு என்று தியான் கேட்க அஜு வர்கீஸ் சிரித்தார். இதற்கிடையே நீ ஆசைப்பட்டது போன்று உன் பதவியேற்பு விழாவுக்கு நான் வந்து முதல் வரிசையில் அமர்வேன் என்று தியானிடம் கூறியிருக்கிறார் நவ்யா நாயர்…
“தியான் பேசுறது காமெடிக்குன்னு நினைச்சா, அது இப்போ அவருக்கு பெரிய ‘தலைவலி’யா மாறிடுச்சு. எது எப்படியோ, தியான் சீனிவாசனோட இந்த ‘வாய்ப்பேச்சு, இப்போ கோலிவுட்ல பயங்கரமான டிபேட் ஆகிடுச்சு..!



