Sakshi Agarwal:கவர்ச்சிப் பூ.. தாராள கிளாமரில் மின்னும் சாக்ஷி அகர்வால்!

Sakshi Agarwal : தமிழ் திரை உலகில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கத் தொடங்கி இன்று நாயகியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை தான் சாக்ஷி அகர்வால்.

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ஆர்யாவின் “ராஜா ராணி” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்ததன் மூலம் தனது கலை உலக பயணத்தைத் தொடங்கியவர் தான் சாக்ஷி அகர்வால்.

தொடர்ச்சியாக நல்ல பல தமிழ் படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், தல அஜித்தின் விசுவாசம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா உள்ளிட்ட திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார்.

இப்பொழுது மலையாள மொழியில் நாயகியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வால், விரைவில் தமிழ் மொழியிலும் நாயகியாக அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்பொழுது அவர் மலையாளம் மொழியில் நடித்து வரும் ஒரு திரைப்படத்திற்காகப் பிரத்தியேகமாக அவர் களரி பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் வருடங்களில் அவர் தொடர்ச்சியாகத் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *