அரசு கல்லூரியில் அரங்கேறிய அவலம் – அண்ணாமலை குற்றச்சாட்டு.!

Advertisements

சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகப் பாஜகவின் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், கல்வி நிலையங்களில் கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கட்டுக்கடங்காத போதைப் பொருள்கள் புழக்கத்தால் பாலியல் குற்றங்கள் பெருகியுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான், குற்றங்களைத் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

குற்றங்களில் ஈடுபடுவோர் திமுக அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுத்துக் கொள்வதும், குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு எந்த எல்லைக்கும் செல்வதுமான சூழல் தமிழகத்தில் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *