Sachin Tendulkar: வாழ்த்து தெரிவித்து டுவிட்!

Sachin Tendulkar | Twitter | Asian Champions Trophy 2023 hockey

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கித் தொடரில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்…

மும்பை: சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆண்கள் ஆக்கிக் கோப்பைக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணிக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய ஆக்கி அணி கோப்பையைக் கையில் ஏந்திய வீடியோவைப் பதிவிட்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அதில்,’இந்திய ஆக்கிக்கு மற்றொரு பிரகாசமான தருணம்! ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்குப் பாராட்டுகள்!’ எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *