லடாக் சென்ற மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அங்குள்ள கைப்பம்பை அடித்து தண்ணீர் குடித்து மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், யூனியன் பிரதேசமான லடாகிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். தனது லடாக் பயணத்தின் 2வது நாளான நேற்று (ஜூலை 12) டிப்ரிங் கிராமத்தில் உள்ள மணாலி-லே நெடுஞ்சாலை ஓரமாக இருந்த கைப்பம்பை பார்த்த அமைச்சர் அனுராக் தாக்கூர் அதனை தானே இயக்கினார். அதில் சில வினாடிகளுக்கு அடித்து, அதிலிருந்த வந்த தண்ணீரை தனது உள்ளங்கையில் பிடித்து குடித்து பார்த்ததுடன், அருமையாக இருப்பதாக கட்டைவிரலை உயர்த்தினார்.