Sabarimala Pilgrimage Season: துளசி மாலை, வேஷ்டி வாங்க குவிந்த பக்தர்கள்!

Advertisements

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜை தொடங்கி ஜனவரி 20-ந் தேதிவரை நடைபெறும். அய்யப்பனை தரிசனம் செய்யத் தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

Advertisements

இதற்காகக் கார்த்திகை முதல் தேதியில் அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்பவார். அதன்படி நாளைக் கார்த்திகை 1-ந் தேதி தொடங்க உள்ளதால் சேலம் சின்னக் கடை வீதியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

குறிப்பாகத் துளசி மணி, அய்யப்பன் டாலர் மற்றும் அய்யப்பன் வேட்டி உள்ளிட்ட விரத பொருட்கள் வாங்குவதற்கும் இருமுடி பொருட்கள் வாங்குவதற்கும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் விரதப் பொருட்களைக் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

இதே போலச் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விரதப் பொருட்களை வாங்க பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. பொருட்களை வாங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *