Gas Cylinder Price Drop: சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு!

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் வாயிலாக வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.100 குறைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு நுகர்வோருக்கு வழங்கப்படும் மானியத்தை ரூ.100 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் தற்போது ரூ.603க்கு கிடைக்கும். மேலும், 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *