S. Valarmathi I. A. S: அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Advertisements

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் உள்ள அனைத்து மனுக்களையும் இரண்டே நாட்களில் ஆராய்ந்து தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர்வு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரண்டாவது சனிக்கிழமையில் வாலாஜாப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது..

இந்த முகாவிற்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சத்யபிரசாத் வருகை தந்து பொதுமக்கள் பொது விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினார்கள். மேலும் முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் வழங்கப்பட்டது..

தொடர்ந்து திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மூலமாக பெறப்பட்ட பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள், பிறப்பு, இறப்பு, வாரிசு சான்று, ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து மனுக்களை இரண்டே நாட்களில் ஆராய்ந்து தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்..

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *