சி.எஸ்.கே அணி வீரர் தோனி சென்னை வருகை!

Advertisements

18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந்தேதி ஆரம்பித்து, மே 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது. மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறும்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் டோனி, 2 உலக கோப்பைகள் மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளில், அவர் தலைமையில் சி.எஸ்.கே. 5 கோப்பைகளை வென்றுள்ளது.

இந்த நிலையில், மார்ச் 22-ம் தேதி 2025 ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தோனி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

மார்ச் 23-ம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ள நிலையில், பயிற்சியைத் தொடங்குவதற்காகத் தோனி சென்னை வந்துள்ளார்.

இதனால், தோனி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *