உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்-88 பேர் படுகாயம்!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. திங்களன்று சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் அமெரிக்க – ரஷ்ய அதிகாரிகள் பேச்சு நடைபெற்றது. இதில் கருங்கடல் துறைமுகங்கள் வழியாக உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய உக்ரைனை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஒருபுறம் பேச்சு நடத்திக்கொண்டே இன்னொரு புறம் உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சுமி நகரின் மீது திங்களன்று ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 88 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைதி, சமாதானம், போர் நிறுத்தம் என்று வெற்று அறிக்கைகளை விடுத்துவரும் ரஷ்யா அதற்கு மாறாகத் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரீ சிபிகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *