எடப்பாடி பயணத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது யார் தெரியுமா?

Advertisements

டெல்லி:

எடப்பாடி டெல்லி பயணத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது யார் தெரியுமா,? விஜய் தானா.?

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியின் டெல்லி பயணத்தால் தமிழக அரசியலில் திமுக கூட்டணியை விட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான் அதிகம் பாதிக்கப்பட போகிறார் என்று கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.. தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் – அதிமுக கூட்டணி உருவாகாத நிலையில், தற்போது மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில் விஜய் கூட்டணி குறித்து எதுவும், அறிவிக்கவில்லை.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரின் பயணம் இன்று தமிழக அரசியலில் பெரிய பேசுபொருளாக மாரி உள்ளது. டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் இன்னொரு முக்கியமான ஒரு தலைவரும் டெல்லி செல்ல உள்ளாராம். டெல்லியில் முக்கிய தலைவர்களையும் ஈபிஎஸ் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பாஜக உடன் கூட்டணி பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி, செங்கோட்டையன், ஓபிஸ் , சசிகலா , தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றுள்ளனர். இவர்களை ஒன்றிணைப்பதற்காக பேச்சுவார்த்தையும் நடைபெற போகிறதாம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி . திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பயணத்தால் தமிழக அரசியலில் திமுக கூட்டணியை விட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான் அதிகம் பாதிக்கப்பட போகிறார் என்று கருத்துக்கள் வைக்கப்படுகின்ற தமிழக வெற்றிக் கழகம் – அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள்.

இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு எடப்பாடி தரப்பிடம் பேசுகையில், எங்களுக்கு பெரிய பலம் உள்ளது. முக்கியமாக 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதாக எங்கள் சர்வே சொல்கிறது. அதனால் 117 இடங்கள் எங்களுக்கு தேவை, என்று விஜய் தரப்பி பேசி இருக்கிறதாம். இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கூட்டணி சேரவில்லை. இதனிடையே மிகப்பெரிய சிக்கலும் எழுந்துள்ளது.அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கையை அதிமுக ஒருபோதும் ஏற்காது என்றும் கூறுகின்றனர். அவர்களுக்கும், எங்களுக்கும் தற்போதைக்கு கூட்டணி பொறுத்தவரை எதுவும் முடிவாகவில்லை என்று கூறுகின்றனர்.இதனால் அதிமுக, பாஜக இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை போகிறது . இதற்கு முன் அதிமுக, தவெக என்று ஒரு பேச்சுவார்த்தை போனது , ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் தமிழக வெற்றி கழகம் ஒருபோதும் அதிமுக வுடன் கூட்டணி அமையாது என்பதே உண்மை .பொறுத்திருந்து பார்க்கலாம்.!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *