Advertisements

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை முட்கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையைத் தனியார் முட்கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளார். இந்நிலையில் இறந்த மூதாட்டியின் உடலை அந்தப் பாதையில் வைத்துப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து காவல்துறையினரும் வட்டாட்சியரும் அங்கு வந்து பேச்சு நடத்தினர். அதன் பின்னர் பாதையில் உள்ள முட்கம்பி கம்பிவேலியை அகற்றிவிட்டு மூதாட்டியின் உடலை எடுத்துச் சென்றனர்.
Advertisements



