காரில் வந்தால் மட்டுமே நட்சத்திரங்களாக அங்கீகரிப்பார்கள்:துல்கர் சல்மான்

பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும்போது சொகுசு காரில் வந்தால் மட்டுமே தங்களைப் பெரிய நட்சத்திரங்களாக அங்கீகரிப்பார்கள் என்று நடிகர் துல்கர் சல்மான் விமர்சித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து, இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காந்தா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் சாதனையையும் படைத்தது. இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டியளித்தார். அப்போது, பாலிவுட்டில் நடித்தபோது, தான் ஒரு நட்சத்திரம் என்று அனைவரையும் நம்ப வைக்க வேண்டியிருந்தது என்றும் தாங்கள் ஒரு சொகுசு காரில் வந்தால் மட்டுமே அவர்கள் தங்களை நட்சத்திரங்களாக அங்கீகரிப்பார்கள் என்று கூறினார். இதை யடுத்து, படப்பிடிப்பு தளத்தில் உட்கார ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள் என்று கூறினார். இதை தொடர்ந்து, மலையாள திரைத்துறை குறித்து பேசிய துல்கர் சல்மான், தங்கள் துறையில், படங்களுக்கு அதிக செலவு இல்லை என்றும் இங்கு யாரும் ஆடம்பரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *