உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவின் முக்கிய ஆயுத உள்கட்டமைப்புகள் மீது, உக்ரைன் ராணுவம் டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக, ரஷ்ய ராணுவம் உக்ரைனின் கீவ் நகர் மீது, பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா உக்ரைனை இலக்காக கொண்டு நள்ளிரவில் 41 ஏவுகணைகள், 125 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *