பிக்பாஸ் புகழ் அஜாஸ் கானுக்கு 155 வாக்குகள்!

பிக்பாஸ் புகழ் நடிகர் அஜாஸ் கானுக்கு மகாராஷ்டிர தேர்தலில் வெறும் 155 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான அஜாஸ் கான், மகாராஷ்டிர தேர்தலில் ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் போட்டியிட்டு அரசியலில் நுழைந்தார். வெர்சோவா தொகுதியில் போட்டியிட்ட அவரால் 151 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இது, இங்குப் பதிவான 1,298 நோட்டா வாக்குகளைவிட மிகக் குறைவாகும்.

இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பேர் அஜாஸ் கானை பின்பற்றுகின்றனர். என்றாலும் அவரது சமூக ஊடகப் புகழ் அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை. அஜாஸ் கான் இதற்கு முன் மக்களவைத் தேர்தலில் வடக்கு மத்திய மும்பை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலிலும் அவரால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *