அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம் – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பேரறிஞர் அண்ணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். இதில், தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா எனக் கூறினார்.

குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகன் என பேரறிஞர் அண்ணாவுக்கு புகழாரம் சூட்டினார்.

இதனையடுத்து, குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்கள் போற்றும் ஆட்சியை அதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *