
10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி பண்ருட்டியில் கிராம அஞ்சல் ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட திரு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி நாடு முழுவதும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி தலைமை தபால் நிலையம் அருகே அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க கோட்டத் தலைவர் கக்கன் தலைமையில் செயலாளர் ரட்சகர் பொருளாளர் விஜய ராஜன் முன்னிலையில் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய ஊழியர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட திரு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியும் கோரியும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர்.
பகுதிகள் அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுற்று வட்டார பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

