இந்திய ரூபாய்க்கு பெரும் சரிவு..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லா வகையில் 93 ரூபாய் 16 காசுகள் என்கிற அளவில் குறைந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதில் இருந்தே பன்னாட்டுச் சந்தையில் எண்ணெய் எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்க டாலர் மதிப்பும் உயர்ந்து வருகிறது. அதேபோல் இந்திய முதலீட்டுச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெற்று வருகின்றனர்.

மேற்காசியாவில் போர் தொடங்கியதில் இருந்து நேற்று வரை எண்பதாயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதுடன் டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 89 காசுகள் என்ற அளவில் இருந்தது. அதன்பின் நேரம் செல்லச் செல்ல 93 ரூபாய் 16 காசுகள் ஆனது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *