திமுக கூட்டணியில் அதிரடி திருப்பம்..!

Advertisements

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் இம்முறையும் கூட்டணியில் நீடிக்கின்றன. அந்தத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது.
மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியன ஒவ்வொன்றும் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டன. விடுதலைச் சிறுத்தைகள் 4 தொகுதிகளிலும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இவ்விரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்த முறை கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு முந்தைய தேர்தலில்  கொடுத்த தொகுதிகளைக் கொடுக்கத் திமுகவுக்கு மனமில்லை. காங்கிரசுக்கு 28 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மதிமுகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதில் மூன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களை ஒதுக்கியுள்ளது.

பாஜக வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதற்காக மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு தொகுதியைக் குறைத்துக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பெருந்தன்மையாகக் கூறிவிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளும் ஒதுக்கத் திமுக முன்வந்துள்ளது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளைக் கேட்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 5 தொகுதிகளை ஏற்கத் தயாரில்லை. இதனால் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *