
திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியேறியுள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணைந்திருந்தது. அந்தக் கட்சித் தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். வெற்றிபெற்ற வேல்முருகன் ஐந்தாண்டுகளாகத் திமுக கூட்டணியில் இருந்தார்.
இந்தத் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகள் வேண்டும் எனத் திமுகவிடம் வலியுறுத்தினார். வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஓரிடம் கூட ஒதுக்கத் திமுக மறுத்துவிட்டது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறியுள்ளார்.


