
குளிரை சமாளிக்க அடுப்பில் தீ மூட்டி அருகே படுத்து உறங்கிய வாலிபருக்கு தீப்பற்றி எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நியூ மங்களபுரியில் உள்ள அங்கன்வாரி வாலி காலியின் தரைத்தளத்தில் உள்ள அவரது அறையில் வினய் அரோரா எரிந்த நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் நியூ மங்கலாபுரி பகுதியில் உள்ள தனது அறையில் வைக்கப்பட்டிருந்த எரியும் நிலக்கரி பிரேஸியரில் இருந்து ஏற்பட்ட தீ விபத்தில் டெல்லியில் பணிபுரிந்த பவுன்சர் ஒருவர் தூக்கத்திலேயே உடலில் தீப்பற்றி எரிந்து உடல் கருகி உயிரிழந்ததாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பதேபூர் பேரி போலீசாருக்கு புதன்கிழமை மாலை பி.சி.ஆர் அழைப்பு வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டனர்.
36 வயதான பாதிக்கப்பட்டவர் நாற்காலி, துணி மற்றும் மற்ற எரிந்த பொருட்களுடன் தரையில் சடலமாக கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவு உடைக்கப்பட்டு, பார்த்த போது, வாலிபர் தரையில் எரிந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. அறையில் இருந்த நாற்காலி மற்றும் துணிகளும் தீயில் எரிந்து இருந்துள்ளன.
டெல்லி தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழு மற்றும் தடயவியல் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். பின்பு சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


