நடிகர் கார்த்தியின் சர்தார் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு .! எப்போ தெரியுமா.?

Advertisements

பிரபல நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, சர்தார் 2 திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. பி.எஸ். மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமான ‘சர்தார் 2’ உருவாகி வருகிறது.

இப்படத்தில், எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தீபாவளி தினத்தை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அந்த போஸ்டரில், நடிகர் கார்த்தி கையில் வேலுடன் ஆடுவது போன்ற புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *