
பாகிஸ்தானில் மதவெறுப்பு பிரசாரம் செய்த நபர் சுட்டுக் கொலை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஹிந்துகளுக்கு எதிராக தீவிர மதவெறுப்பு பிரசாரம் செய்து வந்த பிரசாரகர் தாரீக் ஜமீல் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மத பிரசாரகரான தாரீக் ஜமீல் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் கானேவால் மாவட்டம் துலம்பா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகன் உயிரிழந்த சம்பவத்தை தாரீக் ஜமீல் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து, ‛‛மகன் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்துவிட்டார். அவருக்காக அனைவரும் பிரார்த்தியுங்கள்‛‛ என தாரீக் ஜமீல் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இச்சம்பவத்தால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


