பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்..
பிரான்சில் பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நார்வே நாட்டின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
இதில், அதிரடியாக விளையாடிய கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தினார். இதன்மூலம் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்…


