Erode massage center: வட மாநில பெண்களை வைத்து படு ஜோராக நடந்த விபச்சாரம்!

Advertisements

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சார தொழில் நடத்தி வந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடிவருகின்றனர்.

ஈரோடு மாநகரில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வட மாநில பெண்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதில் சில மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் தொழில் நடைபெறுவதாக வரும் தகவலை அடுத்து அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி கைது நடவடிக்கையிலும் ஈடுபடுவதும், பெண்களை மீட்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

Advertisements

இந்நிலையில் ஈரோடு சம்பத் நகரில் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 1000 ரூபாய் முதல் மசாஜ் செய்யப்படும் என கூறி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுனர். அப்போது மசாஜ் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த மசாஜ் சென்டரின் ஊழியர்களான ரவிக்குமார் உள்ளிட்ட  மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 இளம்பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மசாஜ் சென்டருக்கு சீல் வைத்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *