Rameswaram: சாமி தரிசனம் செய்யத் தடை!

Advertisements

பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒட்டிராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்திற்குமாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் வருகை தருவதையொட்டி பாதுகாப்பு நலன்கருதி ஜனவரி 20 மற்றும் 21 இரு தினங்கள் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

20. தேதி அன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணிவரை இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இராமேஸ்வரம் நகர் பகுதியிலும் இதே நேரத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

21. தேதிஅன்று இராமேஸ்வரம் நகரில் காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.20. மற்றும் 21 ஆகிய இரு தினங்களுக்குக் கனரக வாகனங்கள் இராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் சென்று வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி சுற்றுலா தளத்திற்கு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்படும்20. தேதி நன்பகல் 12:00 மணி முதல் 21 தேதி நன்பகல் 12:00 வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.ண இதைத்தொடர்ந்துஅருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில் சாமி தரிசனம் மாற்றம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

20. தேதிஅன்று காலை 08:00 மணி முதல் மாலை 06:00 மணிவரை பக்தர்களுக்குத் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பாதுகாப்பு நலன் கருதி இராமேஸ்வரம் நகர்ப்பகுதி முழுவதும் 20. தேதி மற்றும் 21 ஆகிய இருதினங்களுக்கு டிரோன் கேமரா பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்.விஷ்ணு சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *