கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் நெல் நாற்று நடவு இயந்திரம்மூலம் நடவு பணிகள் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்த காரணத்தால் தை மடங்கள் பட்டம் நெல் நடவு செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் நெல் நடவு வேலைக்குக் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் நெல் நாற்று நடவு செய்து வந்த நிலையில் தற்பொழுது இயந்திரங்கள்மூலம் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது தை மடங்கள் பட்டம் நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் போதிய கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய பணிகள் மிகவும் பாதிக்கப்படுகிறது என்றும் ஆகையால் நெல் நாற்று நடவு இயந்திரம் பயன்படுத்தி விவசாயிகள் நெல் நாற்று நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நெல் நாற்று நடவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் விவசாயி செலவுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் இனி வரும் காலங்களில் இயந்திரத்தைக் கொண்டு நெல் நடவு செய்யும் முறையைக் கடைபிடிக்கப் போவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

