இந்தியா மற்றும் இலங்கை நட்புறவு : நம்பிக்கையே அடிப்படை என ராஜ்நாத் சிங் புகழாரம்.!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மூன்று நாள் அரசுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய  அமைச்சர் பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் கொழும்பியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்தார்.
நாங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம், மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம், என்று கூறினார்.இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன என்றும் தெரிவித்தார்.
உலகின் பிற நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பல சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்தியா 2026-27 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு இன்று 16 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *