விஜய்க்கு அன்பில் மகேஷ் ரகசிய தூது… மூக்குடைப்பட்ட சோகம்.!

அதிமுக ஆட்சிக்கு வந்தால், அதற்கு முன்பு திமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் பார்க்க வேண்டியவர்களை பார்த்து தங்களை பாதுகாத்து கொள்வார்கள், அதே பார்முலாவை முதல்வர் விஜய்யிடம் பின்பற்றினால் நடக்குமா.? அப்படி ஒரு பார்முலாவை பின்பற்றி தான் தற்பொழுது மூக்குடைபட்டு இருக்கிறார் முன்னாள் பள்ளி கல்வி துறை அமைச்சரான அன்பில் மகேஷ்.

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்ததில் இருந்தே கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஒவ்வொரு துறையின் ஊழல்களும் தூசி தட்டி எடுக்கப்பட்டு ஒவ்வொரு தகவலும் முதல்வர் விஜய் கவனத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. மாஜி அமைச்சர்கள் பலரும் டார்கெட் செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும்,  ஆட்சிக்கு புதுசு தமக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்கிற திமுக மாஜிகளின் திட்டத்தை தவிடு பொடியாக்கும் வகையில், திமுகவுக்கு ஆதரவான அரசு உயர் அதிகாரிகளை பெரும்பாலும் மாற்றி விட்டார் முதல்வர் விஜய்.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தரப்பு மிக பெரிய முறைகேடுகளில் சிக்கிய ஆவணங்கள் அனைத்தும்  முதல்வராக விஜய் பதவி ஏற்ற ஒரே வாரத்தில் முதல்வர் டேபிளுக்கு சென்று இருக்கிறது. இதனை தொடர்ந்து தவெக ஆட்சி பொறுப்பேற்ற மிக குறுகிய காலத்திலே பள்ளி கல்வி துறையில் புரோக்கர் போல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வசூல் வேட்டை நடத்திய பி. டி அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸாரின் விசாரணையில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதி, போரூரில் உள்ள திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளை அழைத்து அரசகுமார் சந்தித்தது தெரியவந்தது. அப்போது பள்ளிகளுக்குத் தேவையான அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை 244 சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் பல கோடி ரூபாய் பெறப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அரசகுமார் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்புடைய 61-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர். இந்தக் கணக்குகள் மற்றும் அவற்றில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து அதிக அளவில் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் மேற்கு மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளை குறிவைத்து பணம் வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மோசடி மூலம் பெறப்பட்ட பணம் யார் யாருக்கு சென்றது, அதில் மேலும் யார் பயனடைந்துள்ளனர், அந்தப் பணத்தின் மூலம் எங்கெல்லாம் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் மற்றும் அரசகுமாரின் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சுமார் 100 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானாலும் கூட, இதில் குறைந்தது 300 கோடி வரை முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக  கூறப்படுகிறது. பிடி அரசகுமாரிடம் நடத்திய விசாரணையில், அன்பில் மகேஷ் குடும்ப நபர்களிடம் தான்,வசூல் செய்த பணத்தை கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் எந்த நேரமும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. விசாரணை இறுதியில் அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படக் கூட வாய்ப்புள்ளது . போதிய ஆதாரங்கள் முதல்வர் விஜய் கைவசம் உள்ளது என்கிற தகவலும் சொல்லப்படுகிறது.  இதனை தொடர்ந்து முதல்வர் விஜய்யின் நெருக்கமான வட்டாரத்தில் இருக்க கூடிய ஒருவரை அணுகி தன்னை காப்பாற்றி கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறார் அன்பில் மகேஷ்.

அதாவது முதல்வர் விஜய்யின் புறவாசல் கதவை தட்டி யாருக்கும் தெரியாமல் அண்டர் டீலிங் போட்டு தன்னை பாதுகாத்துக்கொள்ள முயற்சித்துள்ளார் அன்பில் மகேஷ். இந்த தகவல் அன்பில் மகேஷ் அணுகிய நபர் மூலமாகவே முதல்வர் கவனத்துக்கு சென்றுள்ளது. அதற்கு முதல்வர் விஜய், மக்கள் ஊழலுக்கு எதிராக தனக்கு வாக்களித்து இந்த முதல்வர் நாற்காலியில் அமர செய்துள்ளனர். ஊழல் செய்தவர்களை காப்பாற்ற நம்மை மக்கள் தேர்தெடுக்கவில்லை, ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என காட்டமாக கூறியுள்ளார்.

அதோடு, அன்பில் மகேசுக்கு ஆதரவாக பேச வந்தவருக்கு செம்ம டோஸ் விட்டு ஓட விட்டிருக்கிறார்.  புறவாசல் வழியாக தூது அனுப்பிய அன்பில் மகேஷ் முயற்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அடுத்து எந்த நேரமும்  அன்பில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் முத்துக்குமார் போலீசாரின் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.முத்துக்குமார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இதன் மூலம் முத்துக்குமாரை விமான நிலையங்கள் உள்ளிட்ட குடியேற்றச் சோதனை மையங்களில் கண்காணித்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *