சட்டசபையில் உடல்மொழி குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்..!

மானியக் கோரிக்கையின் போது தன்னுடைய பதிலுரையின் இடையே தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சட்டமன்றத்தில் கடந்த  7ஆம் தேதியன்று காவல்துறை மானியக் கோரிக்கையில், தன்னுடைய பதிலுரையின் இடையேயான தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *