கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதைத் தடுக்க தனியாக ஒரு மதுவிலக்குப் படையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுகள் குறித்து திமுக ஆட்சியில் 18 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கும் தவெக அரசு, அதன் பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதைத் தடுக்க தனியாக ஒரு மதுவிலக்குப் படையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை தவெக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு உள்ளிட்ட கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


