5 ஆண்டு கூட நீடிக்காதா?” – ராஜ்மோகன் காட்டமான விமர்சனம்..!

அமைச்சர் ராஜ்மோகன், திமுகவின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணி கட்சிகளிடம் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்துக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தோழமைக் கட்சிகளாக இருந்தவர்களை திமுகவினர் ஒரு பண்ணையார் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும், அவர்களைச் சாடுவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

“5 ஆண்டு கூட நீடிக்காதா?” என்ற ரீதியில் ஆளும் கட்சியின் கூட்டணி மற்றும் ஆட்சி நடைமுறை குறித்து அவர் கேள்வி எழுப்பி, காட்டமான பதிலடியை வழங்கியுள்ளார்.

மேலும் , திமுக தலைவர் தவெக குறித்து பேசும்போது , இன்றைய சூழலுக்கு ஏற்ப இளைஞரணி சமூக வலைதளங்களில் வேலை செய்து நமது கொள்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தவெக வெற்றிப்பெற்றதுக்கு காரணம், சினிமா கவர்ச்சிக்கு விழுந்த வாக்குகளே தவிர, அரசியல் எழுச்சிக்கானது இல்லை என்று தெரிவித்தார். இந்த சினிமா கவர்ச்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றும் இரண்டு ஆண்டுகள் கூட இந்த அரசு நீடிக்காது என்றும் கூறினார்.

குழந்தைகள் அம்மாவை தேடுவது போல மக்கள் கொஞ்ச நாட்களில் நம்மை தேடி வருவார்கள் என்று தெரிவித்தார். அனைவரும் சோர்ந்து போகாமல் வேலையை பாருங்கள் என்று கட்சியினரிடையே அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *