Rajiv Gandhi Memorial Day:காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

Advertisements

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

புதுடெல்லி:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சல் செலுத்தினர். இதேபோல் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுத் தினம் மே 21ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டுக் குண்டு வைத்துக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூரில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் டெல்லியில் அவரது தாத்தா ஜவஹர்லால் நேரு, தாய் இந்திரா காந்தி, சகோதரர் சஞ்சய் காந்தி, ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ள ‘வீர் பூமி’ என்ற இடத்திலும் ராஜீவ் காந்திக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *