
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் கோவை, நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இன்று தென்காசி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
நாளை தென்காசி, தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆகஸ்டு ஐந்தாம் நாளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழையும், தென்காசி, தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும் பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.



