fisherman:மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 21 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாகப் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைபட்டினத்திலிருந்து 4 விசைப்படகுகளில் 21 மீனவர்கள் சென்றனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களைக் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், அங்கு விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *