ஜனநாயக கடமை ஆற்றினார் ராகுல் காந்தி!

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர்.

இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.

டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு காலைத் தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிர்மான் பவன் வாக்குச்சாவடிக்குயில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு வந்த ராகுல் காந்தி தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.

கடந்த முறை குடும்பத்துடன் சென்று வாக்களித்த ராகுல் காந்தி இம்முறை தனியாகச் சென்று வாக்களித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *