டி.வி.எஸ்- BMW பைக்கை ஓட்டிய ராகுல்காந்தி.!

சமீபத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஜெர்மனியின் மியூனிச் நகரிலுள்ள பி.எம். டபிள்யூ நிறுவனத்துக்கு சென்றார். அங்கு, பல்வேறு பி.எம்.டபிள்யூ கார்களை ராகுல் பார்வையிட்டார். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பி.எம்.டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த டி.வி.எஸ்- பி.எம். டபிள்யூ G450GS ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்த்தார்.

ஹோசூர் டி.வி.எஸ் பிளான்டில் இந்த பைக் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 450 சிசி திறன் கொண்ட இந்த பைக்கை ஓட்டிய அனுபவம் அலாதியாக இருந்தது. இந்திய இன்ஜீனியரிங்குக்கு பாராட்டுகள். பிவெளிநாட்டிலும் இந்திய கொடி ஓங்கி பறக்க தொடங்கியுள்ளது.மகிழ்ச்சியை தருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். முன்னதாக, பி.எம்.டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து அப்பாச்சி ஆர்.ஆர். 310 ரக பைக்கையும் டி.வி.எஸ்  நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *