எடப்பாடியுடன் ஆதவ் அர்ஜுனா ரகசிய பேச்சு: அம்பலமாகிய அதிச்சி தகவல்.!

Advertisements

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து தற்போது அந்த கட்சியின் தேர்தல் பணி குழு தலைவராகவும் விஜய்க்கு நெருங்கிய ஆலோசகராகவும் பணியாற்றி வரும் ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பழனிச்சாமி இடம் கெஞ்சி கூத்தாடிய ஒரு நிகழ்வு தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

திருச்சியில் பிறந்து வளர்ந்த ஆதவ் அர்ஜுனா விளையாட்டுத்துறையில் ஆர்வம் மிக்கவர். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023 ஆம் ஆண்டு முதல் இந்திய கூடை பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார் . அரைஸ் கேப்பிட்டல் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற அரசியல் வியூக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஆதவ் அர்ஜுனா இளம் வயதிலேயே தனது தாயாரை இழந்தவர் திருச்சி ராமகிருஷ்ணா பள்ளியில் படித்து பின்னர்,  சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டின் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகளான டெய்சி மார்ட்டினை இவர் திருமணம் செய்து கொண்டார்.

ஆதவ் அர்ஜுனா ஒரு மோசடி பேர்வழி எங்கள் குடும்பத்தில் மிகப்பெரிய சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தியதுடன் ஏராளமான பண நஷ்டத்தையும் ஏற்படுத்தி விட்டார் என ஏற்கனவே லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் புகார் தெரிவித்து வருகிறார். ஆதவ் அர்ஜூனா தனது மாமனார் மார்ட்டின் நிறுவனத்தின் பெயரில் சுமார் 82 கோடி ரூபாய் அளவில் கடன் பெற்று விட்டு அந்த குடும்பத்தை விட்டு பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

ஆதவ் அர்ஜுனா மிகப்பெரிய சுயநலக்காரர். எந்த சூழ்நிலையிலும் பல்டி அடிக்க கூடியவர் என்றெல்லாம் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆதவ் ஜூனா தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியது திமுக மூலமாகத்தான் என்பது முக்கிய செய்தி ஆகும் . கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மு க ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத் திட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஆதவ் அர்ஜுனாவும் ஒருவர்.

இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோருடன் இணைந்து திமுகவிற்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். இதன் பின்னர்,  அவர் திமுகவில் இருந்து பல்டி அடித்தார் . கடந்த 2023 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் அடுத்த ஆண்டே கட்சி தலைமையை மீறியதாக தொல் திருமாவளவனால் ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா விலகுவதாக அறிவித்தார் . இதன் பின்னர் அவர் நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் முன்னதாக அதிமுகவில் சேர்வதற்காக அவர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பேரம் பேசிய விவகாரம் வெளியே யாருக்கும் தெரியாது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேறியதும் அவர் முதன் முதலாக அதிமுகவுடன் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் சிபாரிசின் பேரில் அவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

அப்பொழுது அவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒரு முக்கியமான கோரிக்கை வைத்தார்.  அந்த கோரிக்கை ஏற்கப்படாத சூழ்நிலையில் தான் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பல்டி அடித்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசும் பொழுது தனக்கு ராஜ்யசபா எம்பி பதவி தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறார் . இது தவிர அதிமுகவில் தனக்கு முக்கிய பதவி தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவிக்கும் பொழுது மாநில அளவில் ஏதாவது ஒரு பதவி வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.  அதுவும் துணைச் செயலாளர்,  துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் தான் வழங்க முடியும் . இது மட்டுமல்லாமல் உங்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தால் ஏற்கனவே கட்சியில் பல ஆண்டு காலம் பணி செய்தவர்கள் என் மீது கோபப்படுவார்கள்.

ஏற்கனவே பலர் ராஜ்யசபா சீட் கேட்டு கோரிக்கை வைத்து வருகிறார்கள் எனவே , அந்த பதவியை உங்களுக்கு தர முடியாது தேவைப்பட்டால் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பாத ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பழனிச்சாமியை பலமுறை சந்தித்து பேசி இருக்கிறார் .

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ராஜ்யசபா சீட்டு என்ற பேச்சுக்கு இடமில்லை என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிலையில் தான் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியே கசிந்து இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்திலும் தற்போது,  ஆதவ் அர்ஜுனாவுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் புசி ஆனந்துக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *